Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

5,000 பேருக்கு தட்டம்மை பாதிப்பு; 1990-க்குப் பிறகு முதல் மரணம்

5,000 பேருக்கு தட்டம்மை பாதிப்பு; 1990-க்குப் பிறகு முதல் மரணம்

விஸ்கான்சின் மாநிலத்தில் தட்டம்மையால் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது. அம்மாநிலத்தில் 1990-ம் ஆண்டுக்குப் பிறகு பதிவான முதல் தட்டம்மை மரணம் இதுவாகும்.

பகிரவும் WhatsApp Facebook

அமெரிக்காவில் நடப்பாண்டில் தட்டம்மையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,182 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

இது கடந்த ஆண்டின் 2,289 பாதிப்புகளைவிட இரு மடங்குக்கும் அதிகம். 1991-ம் ஆண்டுக்குப் பிறகு பதிவான அதிகபட்ச வருடாந்திர பாதிப்பு இதுவாகும். பாதிக்கப்பட்டவர்களில் 562 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 96 சதவீதத்தினர் தடுப்பூசி செலுத்தாதவர்கள் அல்லது தடுப்பூசி விவரம் தெரியாதவர்கள்.

விஸ்கான்சின் மாநிலத்தில் தட்டம்மையால் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது. அம்மாநிலத்தில் 1990-ம் ஆண்டுக்குப் பிறகு பதிவான முதல் தட்டம்மை மரணம் இதுவாகும்.

தட்டம்மையைத் தடுக்க இரு தவணை எம்எம்ஆர் தடுப்பூசி செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், அமெரிக்காவில் மழலையர் வகுப்பு மாணவர்களிடையே இந்தத் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் விகிதம் அண்மைக்காலமாக குறைந்து வருவதாகவும் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய செய்தி
E20 பெட்ரோலில் எத்தனால் அளவு 19–21% மட்டுமே: பரிசோதனையில் உறுதி
அடுத்த செய்தி
AI-driven attacks force firms to overhaul cybersecurity

தொடர்புடைய செய்திகள்